கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்ற செயலில் ஈடுபட்ட 53 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்ற செயலில் ஈடுபட்ட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-17 19:00 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் சாராயம் மற்றும் கஞ்சா கடத்தல், விற்பனை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். இதில் சாராயம் காய்ச்சுதல், கடத்தல், விற்பனை செய்தல் மற்றும் மது பாட்டில்கள் கடத்தல், விற்பனை செய்தல் போன்ற குற்ற செயலில் ஈடுபட்ட 19 பெண்கள் உட்பட 53 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 370 லிட்டா் சாராயம், 212 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கல்வராயன்மலையில் உள்ள தாழ்மொழிபட்டு ஓடை அருகே சாராயம் காய்ச்சுவதற்காக 7 பிளாஸ்டிக் பேரல்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 1,400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்