52-வது நாளாக சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்

52-வது நாளாக சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-11-21 19:51 GMT

மங்களமேடு:

மங்களமேட்டை அடுத்த திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடை நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிர்வாகத்தை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 52-வது நாளாக நேற்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே இது தொடர்பான வழக்கில் நேற்று கோர்ட்டு தீர்ப்பு அளிக்கும் என்று சுங்கச்சாவடி ஊழியர்கள் எதிர்பார்த்த நிலையில், அதனை அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதிக்கு கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது என்று தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் பணியில் அமர்த்தும்வரை தங்களது போராட்டம் தொடரும் என்று சுங்கச்சாவடி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்