தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 51 போலி மருத்துவர்கள் கைது..!

தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 51 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2023-04-11 08:24 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து காவல்துறையினரும், மருத்துவ துறையினரும் இணைந்து கடந்த 3 நாட்கள் நடத்திய சோதனையில் மாநிலம் முழுவதும் 51 போலி மருத்துவர்களை கைது செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் 15 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா, ஆந்திராவில் மருத்துவராக பயில்வதற்கான விதிகள் வேறாக இருப்பதால், சிலர் தமிழ்நாட்டு விதிகளுக்கு உட்படாமல் தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் சட்ட விரோதமாக மருத்துவர்களாக பணியாற்றிவருவதாக விசாரணையில் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற போலி மருத்துவர்களை கண்டறியும் பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் போலி மருத்துவர்களை ஒடுக்க சிறப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்