சூறாவளி காற்று வீசியதால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது

திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;

Update: 2023-10-01 20:45 GMT

திருவையாறு:

பலத்த காற்றுடன் மழை

தஞ்சை மாவட்டம் திருவையாறு சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. சூறாவளி காற்றினால் பல்வேறு இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன.

5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன

ஆச்சனூர், மருவூர், வடுகக்குடி, வளப்பகுடி ஆகிய பகுதியில் 200 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இன்னும் 20 நாட்களில் வாழை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சூறாவளி காற்றில் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்து சேதம் அடைந்தன.

இயற்கை இடர்பாடின் காரணமாக திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் 3-வது முறையாக வீசிய சூறாவளி காற்றினால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நிவாரணம் வழங்க வேண்டும்

இதுகுறித்து தமிழக அரசு சேதமடைந்த வாழை மரங்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்கவேண்டும். மேலும், நெற்பயிருக்கு காப்பீடு செய்வதுபோல் வாழை பயிருக்கும் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரையில் தமிழக அரசு செவிசாய்க்காமல் இருந்து வருகிறது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்