வாரவிடுமுறையையொட்டி 500 சிறப்பு பஸ்கள்; நாளை முதல் இயக்கப்படுகிறது

வாரவிடுமுறையையொட்டி 500 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.

Update: 2023-07-13 20:05 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாரவிடுமுறை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் நாளை (சனிக்கிழமை) மற்றும் 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்களும், சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 150 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

சிறப்பு பஸ்கள்

இதேபோல் திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 100 பஸ்கள் என கூடுதலாக 2 நாட்களில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதேபோன்று விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்பிச்செல்ல வருகிற 16-ந் தேதி, 17-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் சென்னை வழித்தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிற வழித்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்