500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் நகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் பாஸ்கரன் தலைமையில் சோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது மார்க்கெட் பகுதியில் உள்ள கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அங்கிருந்து 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து கடையின் மேல் மாடியில் சுமார் ஒரு டன் அளவிற்கு பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருப்பது சோதனையில் தெரியவந்தது. அந்த குடோனை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அப்போது சுகாதார ஆய்வாளர் முருகன், துப்புரவு பணி மேற்பார்வையாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.