மாற்று கட்சியினர் 50 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைகிறார்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியினர் 50 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைவதாக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் கூறினார்.

Update: 2022-08-23 15:31 GMT

பொள்ளாச்சி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியினர் 50 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைவதாக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் கூறினார்.

அமைச்சர் ஆய்வு

பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இன்று (புதன்கிழமை) தி.மு.க. மாநாடு நடக்கிறது. அங்கு மாநாட்டு மேடை மற்றும் பணிகளை நேற்று அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோவை தெற்கு மாவட்ட பொறுப் பாளர் டாக்டர் வரதராஜன், மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

பெண்கள் முன்னேற்றம்

இதையடுத்து கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் கூறியதாவது:-

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான நல்லாட்சி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசின் சாதனை திட்டங்களால் மாற்று கட்சியினர் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று (புதன்கிழமை) மாபெரும் மாநாடு நடைபெறுகிறது. இதில் மாற்று கட்சியினர் 50 ஆயிரம் பேர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைகின்றனர்.

சிறப்பான வரவேற்பு

இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு மேடைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்