விவசாயி வீட்டில் ரூ.50 ஆயிரம் நகைகள் திருட்டு

திருக்கோவிலூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.50 ஆயிரம் நகைகள் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை;

Update: 2022-10-08 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(வயது 59). விவசாயியான இவர் தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்காக வேலூரில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் கடந்த 3 மாதங்களாக தங்கி இருந்து விட்டு அவ்வப்போது சொந்த ஊருக்கும் வந்து சென்று கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் நேற்று முன்தினம் சேகர் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்