ரூ.50 ஆயிரம் போதைப் பொருட்கள் பறிமுதல்

குடியாத்தம் அருகே ரூ.50 ஆயிரம் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2023-10-08 18:46 GMT

குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் அருகே உள்ள மருத்துவர் காலனி பகுதியில் ஒரு கார் ஷெட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், முத்துக்குமார், ஹரிதாஸ் உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம் அங்கு சென்று கார் ஷெட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது 3 மூட்டைகளில் போதைப்பொருள் பொட்டலங்கள் இருந்தது. சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து குடியாத்தம் மொய்தீன் பேட்டையைச் சேர்ந்த அம்ஜத் (வயது 38) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் போதை பொருட்களை எங்கிருந்து கொண்டு வந்தார் எனவும், எங்கெங்கு கடைகளுக்கு சப்ளை செய்தார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்