50 மாணவர்கள் ரத்ததானம்
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் 50 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஊட்டி அரசு கலைக் கல்லூரி சார்பில், ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. முகாமை ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் ஜெயராமன், ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி டீன் மனோகரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இதில் அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சனில் கலந்துகொண்டு பேசினார். முகாமில் தேசிய மாணவர் படையின் பொறுப்பாளர் விஜய் முன்னிலையில், 50 மாணவ-மாணவிகள் ரத்ததானம் செய்தனர். இதில் ஊட்டி டாக்டர் பிரவீன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.