திருச்சி மாநகரில் 50 பன்றிகள் பிடிபட்டன
திருச்சி மாநகரில் 50 பன்றிகள் பிடிபட்டன;
திருச்சி மாநகராட்சியில் பன்றிகள் அதிக அளவில் பொது இடங்களில் நடமாடுவதாகவும், பன்றிகள் மூலம் பல்வேறு தொந்தரவு ஏற்பட்டு வருவதாகவும் புகார்கள் வந்தது. இதனையடுத்து நேற்று முதல் கட்டமாக கல்லாங்காடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் அருகில் 50 பன்றிகள் பிடிக்கப்பட்டன. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கூறும்போது, திருச்சி நகரில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். பன்றி வளர்ப்பவர்கள் பன்றிகளை நகரை விட்டு வெளியே கொண்டு செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.