விசைத்தறியில் மின்னணு பலகை பொருத்த 50 சதவீதம் மானியம்
விசைத்தறியில் மின்னணு பலகை பொருத்த 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாதாரண விசைத்தறிகளில் உற்பத்தி செய்யும்போது நூலிழைகள் அடிக்கடி அறுந்து விடுவதால் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்ப்பதற்கும், உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கும் கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அமைப்பு சாரா விசைத்தறிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் கூடிய மின்னணு பலகை பொருத்தப்படும்.
அதன்படி தகுதியானவர்கள், இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை வேலூர் மாவட்ட கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.