பயங்கர ஆயுதங்களுடன் 5 வாலிபர்கள் கைது

நெல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-05 19:13 GMT

நெல்லை மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாளையங்கால்வாய் பகுதியில் மர்மநபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் குலவணிகர்புரத்தை சேர்ந்த செல்லப்பாண்டியன் மகன் அருண் (வயது 22), தூத்துக்குடி மாவட்டம் உத்தமபாண்டியபுரத்தை சேர்ந்த சுடலைமுத்து மகன் வேல்ராஜ் (30), குலவணிகர்புரத்தை சேர்ந்த கணேசமூர்த்தி மகன் முத்துராமலிங்கம் (22), ஆறுமுகம் மகன் துரைமுருகன் (21), நயினார் மகன் ராஜா (20) ஆகியோர் என்பதும் அவர்கள் குலவணிகர்புரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இருந்த போது இலந்தைகுளத்தை சேர்ந்த ஒருவருடன் தகராறு ஏற்பட்டதும், இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அந்த நபரை கொலை செய்ய திட்டம் போட்டு அங்கு பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்