கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது
கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சுரண்டை:
சுரண்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக சுரண்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுரண்டை - சங்கரன்கோவில் ரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை மறித்து விசாரணை நடத்தியது போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ் மகன் மாரிச்செல்வம் (வயது 24), செல்வம் மகன் கவுதகம் (23) எனவும் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது. அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில் 650 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கஞ்சா வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் தங்கராஜ் (28), அய்யப்பன் மகன் கோகுல் (20), மாரியப்பன் மகன் காளிராஜ் (23) ஆகிய 3 பேரையும் போலீசார்கைது செய்தனர்.