வாலிபரை கத்தியால் குத்தியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் வாலிபரை கத்தியால் குத்தியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-12-08 18:38 GMT

வாலிபருக்கு கத்திக்குத்து

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, சாந்தம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 29). இவருக்கும் கறம்பக்குடி காக்கைகோன் தெருவை சேர்ந்த கருணாநிதி (47) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது.

இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கருணாநிதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வராஜ் மற்றும் அவரது உறவினரை குத்தியுள்ளார்.

5 ஆண்டுகள் சிறை

இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமார் ஜெமி ரத்னா நேற்று தீர்ப்பு கூறினார். அதில், கருணாநிதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்