தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;

Update: 2022-09-15 21:23 GMT

திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 36). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 29.3.2020 அன்று இரவு 7 வயது சிறுமியை வாயை பொத்தி கடத்திச்சென்று, சிறுமியின் ஆடைகளை கழற்றி, பாலியல் தொந்தரவு கொடுத்தார். அப்போது சிறுமி சத்தம்போடவே, அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ராஜேந்திரனை கோட்டை மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகிளா கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீவத்சன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் அருள்செல்வி ஆஜர் ஆனார். இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு, சிறுமியை கடத்திச்சென்ற குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்துக்காக போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்