2 பேருக்கு 5 ஆண்டு சிறை

26 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2023-09-26 20:40 GMT

மதுரை,

கடந்த ஆண்டு தேனி மாவட்டம் போடி பகுதியில் கஞ்சா கடத்துவதாக தேனி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது போடி பஸ் நிலையம் அருகில் சந்தேகத்துக்கு இடமாக காரில் வந்த சிலரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 26 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டியை சேர்ந்த விஜயன் (வயது 53), போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (49) உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் போதைப்பொருள் தடுப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் விஜயபாண்டியன் ஆஜரானார். முடிவில், விஜயன், பாலமுருகன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். கருப்பையா என்பவர் விடுவிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்