கதம்ப வண்டு கொட்டி 5 பெண்கள் காயம்
கதம்ப வண்டு கொட்டி 5 பெண்கள் காயம் அடைந்தனர்
சிவகங்கையை அடுத்த வேம்பத்தூரில் உள்ள கண்மாயில் நேற்று 100 நாள் வேலைத்திட்ட பணியில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை அந்தப் பகுதியில் இருந்த கதம்ப வண்டு கொட்டியது. இதில் வேம்பத்தூரை சேர்ந்த ஜெயலட்சுமி(வயது 49), அஞ்சலாதேவி (30), முத்து (42), அழகு (65), பஞ்சு (45) ஆகிய 5 பெண்கள் மயங்கி விழுந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.