கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது

கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-05 18:45 GMT

மதுக்கரை

கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, துணை சூப்பிரண்டு கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் தமிழக-கேரள எல்லையான வாளையாறு, வேலந்தாவளம், கோபாலபுரம், செம்மனாம்பதி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மதுக்கரை அருகே கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அதில் 50 கிலோ எடை கொண்ட 100 மூட்டைகளில் 5 டன் ரேஷன் அரிசி இருந்ததும், அதனை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து லாரியில் இருந்த குனியமுத்தூரை சேர்ந்த வல்லரசு (23), குறிச்சியை சேர்ந்த செந்தில்நாதன் (36) ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்