5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

வெள்ளப்பெருக்கு காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

Update: 2022-08-11 17:29 GMT

கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் 350 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டுப்படகுகள் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்தநிலையில், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளநீர் பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் கலந்து வருகிறது. தண்ணீர் அதிகவேகத்துடன் சென்று கடலில் கலந்து வருவதால் தண்ணீரின் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பழையாறு துறைமுகத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடந்த 5 நாட்களாக அனைத்து படகுகளும் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.






Tags:    

மேலும் செய்திகள்