ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை மர்ம நபர் திருடிச்சென்றார்.

Update: 2023-01-16 20:28 GMT

திருச்சி கே.கே.நகர் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் கமலா(வயது 76). சம்பவத்தன்று இவர் காந்தி மார்க்கெட்டில் இருந்து கே.கே.நகருக்கு அரசு பஸ்சில் வந்தார். கே.கே.நகர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய பின்னர் பார்த்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கே.கே.நகர் போலீசில் கமலா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்