என்ஜினீயர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

Update: 2023-02-06 19:30 GMT

கருப்பூர்:-

சேலம் கருப்பூர் அருகே உள்ள ஆனைகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காவேரி (வயது 43). இவர் மேச்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அருணா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

இவர் கடந்த 4-ந் தேதி தனது குடும்பத்துடன் தர்மபுரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் ஆனைக்கவுண்டம்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோ மற்றும் துணிமணிகள் கலைந்து கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கருப்பூா் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார், கைரேகை நிபுணர்கள் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்