மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் விருது
மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.;
சென்னை,
மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு காந்தி அடிகள் விருது வழங்க தமிழ்நாடு அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது,
அதன்படி,
கோ.சஷாங்சாய் காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் மாவட்டம்
ப.காசி விஸ்வநாதன், காவல் துணை கண்காணிப்பாளர், தெற்கு சென்னை
கா.மு.முனியசாமி, காவல் ஆய்வாளர், ஆவடி
அ.பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர், மதுரை
ஜெ.ரங்கநாதன், தலைமை காவலர், ராணிப்பேட்டை காவல் நிலையம்
ஆகியோருக்கு மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடுத்த ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இந்த விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40 ஆயிரம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.