ஆயுதங்களுடன் பதுங்கிய 5 பேர் கைது

மதுரை தெப்பக்குளம் வைகை ஆற்று பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-24 20:09 GMT

மதுரை, 

மதுரை தெப்பக்குளம் போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தெப்பக்குளம் வைகை ஆற்றின் மேம்பாலத்திற்கு கீழே சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த 5 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அனுப்பானடியை சேர்ந்த சரவணமுத்து (வயது 19), செந்தில்குமார் (29), சிந்தாமணி ஜோதிமணி (28), மேலஅனுப்பானடி முத்துப்பாண்டி (20), விருதுநகர் மாவட்டம் கலைச்செல்வன் (25) என்பதும், அவர்கள் அங்கு ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்