பணிக்கம்பட்டியில் இரும்பு கம்பிகள் திருடிய 5 பேர் சிக்கினர்
பணிக்கம்பட்டியில் இரும்பு கம்பிகள் திருடிய 5 பேர் சிக்கினர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டியில் குடிசை மாற்று வாரியம் மூலம் 516 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு கிடந்த இரும்பு கம்பிகளை ஒரு கும்பல் திருட முயற்சி செய்தது. இதை அங்கு வேலை செய்யும் நபர்கள் பார்த்து சத்தம் போட்டனர். சத்தத்தை கேட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் விரட்டி சென்ற போது ஒருவர் மட்டும் வீட்டிற்கு சென்று பதுங்கியதாக தெரிகிறது. இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் வீட்டில் பதுங்கிய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குள்ளக்காபாளையத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 32), சக்தி மில் முருகானந்தம் (28), ரமேஷ் (27), வடிவேல் (35), சங்கம்பாளையம் (39) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டியில்