விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டி பகுதியில் கருக்கான்பட்டியை சேர்ந்த தமிழரசன் (வயது 63), ராஜாளிப்பட்டியை சேர்ந்த மணி (62), முத்துலெட்சுமி (48), நம்பம்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (49), விராலிமலையை சேர்ந்த சின்னராசு (29) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 140 மதுபாட்டில்கள், ரூ.17 ஆயிரத்து 810-ஐயும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ராஜாளிப்பட்டி பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த அதேபகுதியை சேர்ந்த மணிவண்ணன் (47) என்பவருக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.