பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலுப்பூரில் சிலர் பொது இடத்தில் பணம் வைத்து சூதாடுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் நிகல்யா உள்ளிட்ட போலீசார் ஜீவா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் விளாப்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 24), தமிழன் (22), அன்பு (21), முத்துக்குமார் (24), தங்கபாண்டியன் (24) என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.