பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

மல்லூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-17 19:30 GMT

பனமரத்துப்பட்டி:-

மல்லூர் அருகே உள்ள பசுவநத்தம்பட்டி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக மல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பசுவநத்தம்பட்டி பாலத்திற்கு அடியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் பாரப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 34), கதிர்வேல் (33), பூமலை (27), திருப்பதி (30), மயில்சாமி (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரக்ள் 5 பேரையும் போலீசார கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்