பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த தகவலின்பேரில், டவுன் இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டல் பின்புறம் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 35), கரூர் மண்மங்கலத்தை சேர்ந்த அஜித் (27), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சிவா (29), தெரசா நகரை சேர்ந்த மணிவண்ணன் (34), பன்னீர் (46) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.