பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டை போஸ் நகரில் பணம் வைத்து ஒரு கும்பல் சூதாடுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சோதனையிட்டனர். இதில் ரவிச்சந்திரன் (வயது 54), ராஜேந்திரன் (60), செந்தில் (48), லட்சுமணன் (40), சேகர் (43) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.4,530-ஐ பறிமுதல் செய்தனர்.