மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் சிக்கினர்

நெல்லையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் சிக்கினர்.

Update: 2023-04-03 18:47 GMT

நெல்லை-கன்னியாகுமரி நான்குவழி சாலையில் ரெட்டியார்பட்டி மலை பகுதியில் சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதாக பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த செந்தில் மகன் அய்யப்பன் (வயது 25), துர்க்கைமுத்து மகன் மணிகண்டன் (23), பிரபாகரன் (22), குமார் மகன் மணிகண்டன் (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்