காற்றாலை மின்உற்பத்தி நிலையங்களில் காப்பர் ஒயர் திருடிய 5 பேர் கைது

சங்கரன்கோவில் அருகே காற்றாலை மின்உற்பத்தி நிலையங்களில் காப்பர் ஒயர் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-17 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலான்குளம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காற்றாலை மின்உற்பத்தி நிலையங்களில் இருந்து காப்பர் ஒயர்கள் உள்ளிட்டவை திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் ஆலோசனைப்படி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன், சப்-இன்ஸ்பெக்டர் சூசைபாண்டியன், சங்கரன்கோவில் உட்கோட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமசுப்பு, காசிபாண்டியன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அருப்புக்கோட்டையை சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திக்செல்வம், மதுரை வீரன் மகன் கார்த்திகை செல்வன் (வயது 25), கலிங்கப்பட்டியை சேர்ந்த முருகன் (42), சுப்பிரமணியன் மகன் முத்துராசு (24), இனாம் கரிசல்குளத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் கிருஷ்ணசாமி ஆகியோர் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டூல்ஸ் மற்றும் கார், காப்பர் வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்