லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது
கொட்டாம்பட்டி பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி பகுதிகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கருங்காலக்குடியில் நடத்திய சோதனையில் லாட்டரி சீட்டு விற்ற 5 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 209 லாட்டரி சீட்டுகள் மற்றும் 12,170 ரூபாய் பறிமுதல் செய்தனர். விசாரணையில் உடப்பன்பட்டியை சேர்ந்த தொந்தி (வயது 70), ஓட்டக்கோவில்பட்டியை சேர்ந்த ரமேஷ் (38), கம்பூரை சேர்ந்த செல்வம் (62), அலங்கம்பட்டியை சேர்ந்த அறிவழகன் (56), செக்கடிபட்டியை சேர்ந்த ஜெயமணி (39) என்பது தெரியவந்தது.