கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-15 21:26 GMT

லால்குடி:

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்த மணிகண்டனின் மகன் தமிழரசன்(வயது 26). இவர் திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்றுள்ளார். இதனை அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழரசனை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் லால்குடி சிறுதையூர் மல்லாற்றுகரையை சேர்ந்த மைதீன்பாட்ஷா(42), லால்குடி புது மேம்பாலத்தின் கீழ்பகுதியில் கஞ்சா விற்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ராம்ஜிநகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராம்ஜிநகர் இன்ஸ்பெக்டர் வீரமணி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை ராம்ஜிநகர் முழுவதும் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சந்தோஷ்(38), செல்சங்கர்(52), ஜெயக்குமார்(46) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்