போலி மதுபாட்டில்கள் விற்ற 5 பேர் கைது

போலி மதுபாட்டில்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-09 18:45 GMT

அரியலூர் அருகே உள்ள ஒட்டக்கோவில் கிராமத்தில் போலி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக மாவட்ட மது ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனையிட்டனர். அப்போது அங்கு போலி மதுபாட்டில்கள் விற்ற மதியழகி, சேட்டு, கோல்டு வினோத், பிரகஷ்பதி, விஷ்ணு ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 400 மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்