திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற 5 பேர் கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-09 19:04 GMT

தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் நந்தவனப்பட்டி சந்திப்பு, செட்டிநாயக்கன்பட்டி, அஞ்சலி ரவுண்டானா ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் திண்டுக்கல் அருகே உள்ள சென்னம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 22), சிலுவத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த திருமூர்த்தி (21), ரஞ்சித்குமார் (21) மற்றும் 2 சிறுவர்கள் என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்