கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது

அரக்கோணம் அருகே கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-07 18:21 GMT

அரக்கோணத்தை அடுத்த கைனூர், ராமதாஸ் நகர், கும்பினிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கைனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே 5 பேர் கத்தி, இரும்பு கம்பி ஆகியவற்றை வைத்துக் கொண்டு கும்பலாக கூடி பேசிக் கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசார் வருவதை கண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டையை சேர்ந்த அமர்நாத் (22), பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (19). கைனூர் கண்டிகையை சேர்ந்த பார்த்தசாரதி (23), கீழ்குப்பத்தை சேர்ந்த ஷரோன் பாலச்சந்தர் (20), அரக்கோணம் ரெயில்வே குடியிருப்பை சேர்ந்த மணிகண்டன் (20) என்பதும் இவர்கள் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் கொள்ளை அடிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்த கத்தி, இரும்பு கம்பி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து 5 பேர் மீதும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்