சவர்மா சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி - புதுக்கோட்டையில் பரபரப்பு
சவர்மா சாப்பிட்ட 7 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் யூசுப் என்பவர் நடத்தி வரும் கடையில் ஒரு குடும்பத்தினர் சவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் சவர்மா சாப்பிட்ட 7 வயது சிறுவன் உட்பட 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அங்கிருந்த 7 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டையில் உள்ள பிற சவர்மா கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.