5 ஊராட்சிகள் வேலூர் மாவட்டத்திலேயே இருக்க வேண்டும்

5 ஊராட்சிகள் வேலூர் மாவட்டத்திலேயே இருக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-02-17 17:39 GMT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சக்திவேல், கே.சாமிநாதன், பி.காத்தவராயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், பி.குணசேகரன் ஆகியோர் குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் குடியாத்தம் ஒன்றியத்தைச் சேர்ந்த அகரம்சேரி, கொல்லமங்கலம், கூத்தம்பாக்கம், பள்ளிக்குப்பம், சின்னச்சேரி ஆகிய ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைக்க சில நாட்களுக்கு முன்பு மாதனூரில் கருத்து கேட்பு கூட்டம் நடந்ததாக தகவல் வந்துள்ளது.

இந்த ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைத்தால் மாவட்டத் தலைநகருக்கு 65 கி.மீ. தூரம் உள்ளது. இதனால் இந்த ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு பொருளாதார இழப்பு, பயண நேரம் என கடும் சிரமத்தை ஏற்படுத்தும். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செல்ல வாணியம்பாடிக்கும், தாசில்தார் அலுவலகத்திற்கு ஆம்பூருக்கும் செல்ல வேண்டும். மேற்படி அலுவலகங்கள் அனைத்தும் தற்போது குடியாத்தத்திலேயே உள்ளது. எனவே மேற்கண்ட 5 ஊராட்சிகளை வேலூர் மாவட்டத்திலேயே தொடர ஆவன செய்ய வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம் என கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்