அதிக பாரம் ஏற்றிய 5 லாரிகள் பறிமுதல்

தக்கலையில் அதிகபாரம் ஏற்றிய 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2022-11-29 18:45 GMT

தக்கலை:

தக்கலையில் அதிகபாரம் ஏற்றிய 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தக்கலையை அடுத்த புலியூர்குறிச்சி பகுதியில் நேற்று அதிகாலை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது அளவுக்கு அதிகமாக கனிவளங்களை ஏற்றி கேரளாவுக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அதிக பாரம் ஏற்றி வந்த 5 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து, அவற்றுக்கு மொத்தம் ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் பறிமுதல் செய்த லாாிகளை தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்