ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்தனர்

மருமகன் இறந்ததால் துக்கம் தாங்காமல் பெற்றோர் 3 மகள்களுடன் விஷத்தை குடித்தனர். இதில் 5 பேரும் வீட்டிலேயே மயங்கி கிடந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Update: 2022-09-26 18:45 GMT

ஆரணி

மருமகன் இறந்ததால் துக்கம் தாங்காமல் பெற்றோர் 3 மகள்களுடன் விஷத்தை குடித்தனர். இதில் 5 பேரும் வீட்டிலேயே மயங்கி கிடந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 50). இவர் ஆரணியில் உள்ள ஒரு கடையில் வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி (48). இவர்களது மகள்கள் சரோஜினி (30), லட்சுமி(28), ஜெயந்தி (25).

மூத்த மகள் சரோஜினியை ஆரணியை அடுத்த துந்திரீகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தினகரன் (32) என்பவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து ைவத்தனர்.

திருமணத்துக்கு பின்னர் கணவர் தினகரனுடன் சரோஜினி சென்னையில் குடியேறினார். தினகரன் தனியார் நிறுவனத்தில் செல்போன் டவர் மெக்கானிக்காக பணியாற்றினார். 5 ஆண்டு ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு அக்ராபாளையத்தில் சரோஜினியின் பெற்றோர் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தினர். அதில் பங்கேற்க வந்த சரோஜினி தாய் வீட்டிலேயே இருந்தார்.

தினகரனும் சொந்த ஊரான துந்தரீகம்பட்டுக்கு வந்து அவரும் தாயாருடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் இருந்தார்.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு தினகரன் அளவுக்கு அதிகமாக மதுவை குடித்து ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். கணவர் இறந்ததை அறிந்த சரோஜினி கதறினார்.

விஷத்தை குடித்தனர்

சரோஜினியின் நிலை இவ்வாறாகி விட்டதே என தந்தை அர்ஜூனன், தாயார் ஜெயலட்சுமி, தங்கைகள் லட்சுமி, ஜெயந்தி ஆகியோர் தற்கொலை செய்ய முடிவு செய்து சரோஜினியுடன் அனைவரும் விஷத்தை குடித்து விட்டனர். இதனிடையே கணவரின் இறுதிச்சடங்கிற்கு வராததால் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

அப்போது சரோஜினி, அவரது தாய், தந்தை, தங்கைகள் என 5 பேரும் விஷத்தை குடித்த நிலையில் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர்களை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்