விழுப்புரத்தில்இந்து மக்கள் கட்சியினர் 5 பேர் கைது

விழுப்புரத்தில் இந்து மக்கள் கட்சியினர் 5 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-05-12 18:45 GMT


தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஊழல் நடப்பதாக கூறி அனைத்து மாவட்டங்களிலும் நேற்று இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு சமர்பிக்கும் நிகழ்வை நடத்தினர். விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனுவை சமர்பிக்கும் நிகழ்வை நடத்துவதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்தனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி புகார் மனு கொடுக்கச்சென்ற மாவட்ட தலைவர் சாய்கமல், செயலாளர் முத்துக்குமார், துணைத்தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட 5 பேரை விழுப்புரம் தாலுகா போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்