சாராயம் கடத்திய 5 பேர் கைது

நாகூரில் 250 மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து 4 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-09-22 18:45 GMT

நாகூரில் 250 மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து 4 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல்படி சாராய கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகூர் வெட்டாற்று பாலம் அருகில் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

சாராயம்-மதுபாட்டில்கள் கடத்தல்

பின்னர் மோட்டார்சைக்கிளை சோதனை செய்தபோது, அதில் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை நாகூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூர் வடக்கு தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் ஜீவா (வயது 27), கீழ்வேளூர் தேவூர் வி. ஒ.சி. தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் ராம்குமார் (28), நாகை வெளிப்பாளையம் சிவன் குளம் மேல் கரையை சேர்ந்த தெய்வ ராசு மகன் அலெக்சாண்டர் (35), செல்லூர் பகுதியை சேர்ந்த பாண்டியரசன் மகன் நித்திஷ் (22) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

4 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்

இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 440 லிட்டர் சாராயத்தையும், 250 மதுபான பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்