ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி ரூ.5¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்; விஜய் வசந்த் எம்.பி. வழங்கினார்

ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி ரூ.5¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை விஜய் வசந்த் எம்.பி. வழங்கினார்.

Update: 2023-06-19 18:45 GMT

நாகர்கோவில்,

ஜூன்.20-

ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி ரூ.5¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை விஜய் வசந்த் எம்.பி. வழங்கினார்.

ராகுல்காந்தி பிறந்தநாள் விழா

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா நேற்று காங்கிரஸ் கட்சியினரால் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில விஜய் வசந்த் எம்.பி. கேக் வெட்டி ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டைசன், மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி வதனா நிஷா, மாநகர மாவட்ட தலைவி சோனி மற்றும் லாரன்ஸ், மண்டல தலைவர் சிவபிரபு, வட்டார தலைவர்கள் காலபெருமாள், முருகேசன், அசோக்ராஜ், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் முருகேசன், நிர்வாகிகள் தங்கம், ஆரோக்யராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ரூ.5.30 லட்சம் நலத்திட்ட உதவிகள்

இதேபோல் மார்த்தாண்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும் ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி விஜய்வசந்த் எம்.பி. கேக் வெட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் எம்.பி. அலுவலகங்களில் நடந்த விழாக்களில் ஏராளமானோருக்கு ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் தையல் எந்திரம், சலவை எந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்