சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சூரமங்கலம்:
சேலம் வழியாக செல்லும் ெரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் ெரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ெரயில்வே போலீசார் அடிக்கடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அதிகாலை சேலம் வழியாக சென்ற தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ெரயிலில் (வண்டி எண் 13351) சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பெரிய பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதையடுத்து போலீசார் அந்த பையை திறந்து சோதனை நடத்தினர். சோதனையில் அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது, தொடர்ந்து போலீசார் அதனை பறிமுதல் செய்து, கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.