ராமநத்தம் அருகேகார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்

ராமநத்தம் அருகே கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயமடைந்தாா்.;

Update: 2023-09-24 18:45 GMT


ராமநத்தம், 

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் மங்கல்லால் மகன் விஜய் (வயது 34). இவர் நேற்று ஒரு காரில் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் விஜயராம் மனைவி சிந்துதேவி (35), மலர்ராம் மகன் கீமாராம் (31), ஜெய்ராம் மகன் கைலாஷ் (21) மற்றும் விஜயராம் மகள் அஞ்சலி (9) ஆகியோரும் வந்தனர். காரை விஜய் ஓட்டினார்.

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள அதர்நத்தம் கைக்காட்டி அருகே வந்தபோது, திடீரென விஜயின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்துக்குள் இறங்கியது. அப்போது அங்கிருந்த இரும்பு கம்பியின் மீது மோதி, பள்ளத்துக்குள் உருண்டு சென்று கவிழ்ந்தது.

இதில், காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்