முத்தூர் அருகே வெறிநாய் கடித்து 5 வெள்ளாடுகள் செத்தன

முத்தூர் அருகே வெறிநாய் கடித்து 5 வெள்ளாடுகள் செத்தன

Update: 2023-04-17 12:47 GMT

முத்தூர்

முத்தூர் அருகே வெறிநாய் கடித்து 5 வெள்ளாடுகள் செத்தன

முருகம்பாளையம் கிராமம்

திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே உள்ள முருகம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 42). கூலி தொழிலாளி. இவர் பொருளாதார நிலையில் கூடுதல் வருமானம் பெறுவதற்கு தனது வீட்டில் ஆடு மற்றும் நாட்டுக் கோழிகள் ஆகியவற்றை வளர்த்து வருகிறார்..

இந்த நிலையில் நேற்று காலை 6.50 மணி அளவில் தோட்டத்தில் ஒரு வெறிநாய் ஒன்று திடீரென்று புகுந்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 6 வெள்ளாடுகளில் 3 வெள்ளாடுகளை தலைப்பகுதி, கழுத்துப்பகுதி, உடம்பு பகுதி ஆகிய இடங்களில் ஆக்ரோஷமாக வெறியுடன் ஆங்காங்கே கடித்து குதறியது.

இதனால் வெள்ளாடுகள் காலை நேரத்தில் உயிர் பயத்தில் கத்தி கூச்சலிட்டன. இந்த வெள்ளாடுகளின் அலறல் சத்தம் கேட்டு ராஜ்மோகனின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்து வெறிநாயை விரட்டினர். இதில் ராஜ்மோகனின் 3 வெள்ளாடுகள் பரிதாபமாக உயிரிழந்து விட்டன.

வெள்ளாடுகள் உயிரிழப்பு

இதனால் அந்த வெறிநாய் அங்கிருந்து தப்பி ஓடி அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி துரைசாமி என்பவரின் 2 வெள்ளாடுகளையும், தங்கவேல் என்பவரது 1 வெள்ளாட்டையும், ராமசாமி என்பவரின் 2 வெள்ளாடுகளையும் கடித்து குதறி விட்டு தப்பி ஓடி விட்டது. இதில் துரைசாமியின் 2 வெள்ளாடுகள் உயிரிழந்து விட்டன. மற்ற இருவரின் 3 வெள்ளாடுகள் படுகாயத்துடன் உயிர் தப்பின. மேலும் வெறிநாய் கடித்து இறந்த 5 வெள்ளாடுகளின் மொத்த மதிப்பு சுமார் 50 ஆயிரம் ஆகும்.

இதனை தொடர்ந்து முத்தூர் அரசு கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து உயிரிழந்த வெள்ளாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் உயிரிழந்த அனைத்து வெள்ளாடுகளும் அப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டன. மேலும் உயிரிழந்த வெள்ளாடுகளுக்கு மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை அதிகாரிகள் மூலம் உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தனர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்