ரூ.5½ கோடியில் அமைக்கப்பட்டு வரும் இலங்கை தமிழர் குடியிருப்பு பணிகள்

தச்சூர் கிராமத்தில் ரூ.5½ கோடியில் அமைக்கப்பட்டு வரும் இலங்கை தமிழர் குடியிருப்பு பணிகளை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-13 17:18 GMT

ஆரணி

ஆரணியை அடுத்த தச்சூர் கிராமத்தில் ரூ.4 கோடியே 55 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை இலங்கை தமிழர் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது குடியிருப்பு பணிகள் முழுமை பெற்றுள்ளது, மேலும் சாலை வசதி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகளும், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்,

நுழைவுவாயில் அமைக்கும் பணிகளையும் உடனடியாக முடித்து பயனாளிகளிடம் விரைந்து ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது தாசில்தார் ரா.மஞ்சுளா, வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலாஜி, மண்டல துணை தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, மிருணாளினி, ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல், ஒன்றியக்குழு உறுப்பினர் ஏழுமலை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்