5 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது வழக்கு
நிலுவைத்தொகை செலுத்தாத 5 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு நிலுவை தொகை செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல்லில் நிலுவை தொகை செலுத்தாத 5 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது வடக்கு போலீஸ் நிலையத்தில், கேபிள் டி.வி. தனி தாசில்தார் வில்சன் தேவதாஸ் புகார் அளித்தார்.
இதையடுத்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்களான விக்னேஷ்நகரை சேர்ந்த ராஜ்குமார், சீனிவாசநகரை சேர்ந்த கணேசன், நாகல்நகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன், கார்த்திகேயன், நேதாஜிநகரை சேர்ந்த கருணாகரன் ஆகிய 5 பேர் மீது வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எனவே கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு நிலுவை தொகை செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உடனடியாக தொகை செலுத்த வேண்டும். நிலுவை தொகையை செலுத்த தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேபிள் டி.வி. தாசில்தார் வில்சன் தேவதாஸ் தெரிவித்துள்ளார்.