3 பேரிடம் பணம் பறித்த 5 பேர் கைது
டாஸ்மாக் பார் ஊழியர் உள்பட 3 பேரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் பார் ஊழியர் உள்பட 3 பேரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கத்திமுனையில் பணம் பறிப்பு
கோவை குறிச்சியை சேர்ந்தவர் அந்தோணி ஆனந்தபிரபு (வயது 43), தொழிலாளி. இவர் ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த 3 பேர் திடீரென்று அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்துச்சென்றனர்.
இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்தோணி ஆனந்தபிரபுவிடம் இருந்து கத்தி முனையில் பணம் பறித்த கோவை சாரமேடு பகுதியை சேர்ந்த ஷாருக் நவாஸ் (22), ரிஷ்வான், மிஷால் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
டாஸ்மாக் பார்
கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் கணேஷ்குமார் (25). இவர் கடைவீதியில் ராமர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் கத்தி முனையில் கணேஷ்குமாரை மிரட்டி ரூ.1,300-ஐ பறித்துச்சென்றார்.
இது குறித்த புகாரின்பேரில் கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த கெம்பட்டி காலனியை சேர்ந்த சூர்யாவை (24) கைது செய்தனர். சுண்டக்காமுத்தூர் மெயின் ரோடு அசோக் நகர் டாஸ்மாக் கடை அருகே இருக்கும் பாரில் மகேந்திரன் (34) ஊழியராக வேலை செய்து வருகிறார்.
5 பேர் கைது
இங்கு மது அருந்த வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி மகேந்திரனிடம் இருந்து ரூ.300- ஐ பறித்துச்சென்றார். இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உக்கடத்தை சேர்ந்த சுபாஷ் (23) என்பவரை கைது செய்தனர். நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 3 பேரிடம் பணம் பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.